16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது. ஏலப்பட்டியலில் 132 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சாம் கர்ரன் மற்றும் நிகோலஸ் பூரன், ஹாரி புரூக், மனிஷ் பாண்டே, மயங்க் அகர்வால், தமிழகத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களுக்கு அதிக கிராக்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஐ.பி.எல்.-ல் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரரை பயன்படுத்தும் முறை அறிமுகமாக இருப்பதால் அதற்கு ஏற்ப வீரர்களை எடுக்க 10 அணி நிர்வாகங்களும் வியூகங்களை தீட்டுகின்றன. மொத்தம் 87 வீரர்கள் அணிகளுக்கு தேவைப்படுகிறார்கள்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.