இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 181 ஓட்டங்களைக் குவித்துள்ளது. 

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் நேற்று இப்போட்டி ஆரம்பமாகியது. நேற்றைய ஆட்டமுடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 506 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின்  2 ஆவது நாளான இன்று அவ்வணி 657  ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. அவ்வணியின் 4 வீரர்கள் சதம் குவித்திருந்தனர்.   

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் ஸஹீத் மஹ்மூத் 234 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். நசீம் ஷா 140 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

மொஹம்மத் அலி 124 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹரீஸ் ரவூப் 78 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டமுடிவின்போது விக்கெட் இழப்பின்றி 181 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான இமாமுல் ஹக் ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களையும் அப்துல்லா ஷபீக் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.