முட்டையை 55 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்று இன்று(28) ஆரம்பமாகவுள்ளது. 

இதன் முதற்கட்டமாக கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் 20 இடங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, கொழும்பு கோட்டை ரயில் நிலையம், தெமட்டகொடை, கொம்பனி வீதி, தெஹிவளை, பத்தரமுல்லை, நுகேகொடை, மஹரகம, மீகொட மற்றும் நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள், டொரிங்டன் முச்சந்தி மற்றும் ஹோமாகம ஆகிய கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 55 ரூபாவிற்கு முட்டை விற்பனை செய்யப்படவுள்ளது. 

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை, ஜா-எல, ராகம, நீர்கொழும்பு, கிரிபத்கொடை, கடவத்தை மற்றும் பேலியகொடை ஆகிய பிரதேசங்களில் 55 ரூபாவிற்கு முட்டை விற்பனை செய்யப்படவுள்ளது. 

முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.