இறக்காமம் பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட அமர்வு தவிசாளர் எம்.எஸ். ஜெமில் காரியப்பர் தலைமையில் இன்று (27) காலை சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட வாசிப்புக்கு ஆதரவாக 10 வாக்குகளும், எதிராக 01 வாக்கும் அளிக்கப்பட்டு பெரும்பான்மையுடன் வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குள் இயங்கி வருகின்ற இச்சபையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 5 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 4 பேரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 3 பேரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த ஒருவரும் அடங்களாக மொத்தம் 13 உறுப்பினர்கள் இச்சபையில் அடங்குகின்றனர்.

அதற்கமைவாக, இன்றைய வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின்போது தவிசாளர் அடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 3 பேரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 3 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 3 பேரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த ஒருவரும் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கே.எல்.தாஹீர் இதற்கு எதிராக வாக்களித்திருந்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.முஸ்மி மற்றும் என்.எம்.ஆசிக் ஆகிய இரு உறுப்பினர்களும் இன்றை அமர்வில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.