பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வரலாற்று சாதனையொன்றை தமதாக்கிக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் – ராவல்பின்டியில் இன்று ஆரம்பமான டெஸ்ட் போட்டியிலேயே, இந்த உலக சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திலேயே 500 ஓட்டங்களை கடந்த உலகின் முதலாவது அணியாக வரலாற்றில் இங்கிலாந்து அணி பதிவாகியுள்ளது.

இதன்படி, இன்றைய போட்டி நேர முடிவின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 506 ஓட்டங்களை தமதாக்கிக் கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பில், சாக் க்ரோலி 122 ஓட்டங்களையும், பென் டக்கெட் 107 ஓட்டங்களையும், ஒல்லி போப் 108 ஓட்டங்களையும், ஹாரி புரூக் ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொண்டனர்.

அணியொன்று, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 4 வீரர்கள், சதத்தை பதிவு செய்த முதலாவது சந்தர்ப்பமும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.