இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் ஒஷல ஹேரத்தினால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு இன்று (20) முறைப்பாடு கையளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய பிரஜை என ஒஷல ஹேரத் அதில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டுகளை வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திற்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அதிகார துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள முறைப்பாட்டாளர் ஒஷல ஹேரத், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.