கஹட்டோவிட்ட YMMA கிளையினால் மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகள் மற்றும் 2021 க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 09 ஏ சித்தி பெற்ற மாணவர்களுக்கான சானறிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிக்கா மகா வித்தியாலயத்தின் பதால் ஆப்தீன் மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வினை அல்ஹாஜ் பிர்தவ்ஸ் JP தலைமையிலான கஹட்டோவிட்ட YMMA கிளை ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக அகில இலங்கை YMMA பேரவையின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட கிளைகளின் பணிப்பாளர் மொஹமட் நஸாரி காமில், அந்நூர் தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர் ரிப்கி ரம்ஸான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கௌரவ அதிதிகளாக இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கால்லே தம்மின்த நாயக்க தேரர், திஹாரிய இப்ராஹிமிய்யா மஸ்ஜிதின் ஆலோசகர் அஷ்ஷெய்க் முனீர் முளப்பர், Fr. கிருள் ஜயனாத் - நிட்டம்புவ சென் அந்தனீஸ் தேவாலயம், Fr.சுரங்க சந்தன டி மெல் - The vicor of st. Virgin Mary's church veyangoda மற்றும் st. Peter's church Mirigama, மற்றும் YMMA மத்திய கிளையின் சுகாதார தவிசாளர் ஸஹ்ரான் கலந்து கொண்டதுடன் சியன ஊடக வட்டத்தின் தலைவர் அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் மற்றும் நவ லங்கா நிதஹஸ் பக்ஷய கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ் ருஷ்தி உஸ்மான் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 









கருத்துரையிடுக

Blogger இயக்குவது.