நாளாந்தம் பெற்றுக்கொள்ளப்படும் கொவிட் மாதிரிகள் தொடர்பான ஆய்வுகள் விரிவாக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய தற்போது முன்னெடுக்கப்படும் எழுமாற்று பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ச்சந்ரகுப்த தெரிவித்தார்.

இந்த பரிசோதனைகளின் மாதிரிகள் பொரளை மருத்துவ பரிசோதனைக்கூடம் மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தினூடாக மேலும் ஆய்வுக்குட்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவருவதாக வௌியாகும் தகவல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ச்சந்ரகுப்த தெரிவித்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கொடுப்பனவுகளில் நிலவும் தாமதமே இதற்கு காரணமெனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், தேவைக்கேற்றவாறு மருந்து விநியோகத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.