சுவாச நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்புளூவன்சா உள்ளிட்ட பல வைரஸ் நோய்களினால் சிறுவர்கள் பாதிக்கப்படுவதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்தார்.

நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என அவர், பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார். 

இதேவேளை, நாட்டில் வளியின் தரம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.