மனதை மாற்றிய மனைவி!

   வாரந்தோறும் ஜும்ஆ தொழுகைக்குப் பின் ஒருவர் பள்ளி வாசல் பின்புறமுள்ள அடக்கத்தலத்தில் நெடு நேரம் பிரார்த்திப்பார்.
இதனை கவனித்த அறிஞர் ஒருவர் அவரிடம் இங்கே அடக்கம் செய்யப்பட்டவர் உங்கள் தந்தையா என்றார்.
அவர் இல்லையென்றார்.
உங்கள் தாயாரா எனக் கேட்டார்.
அவர் இல்லை.
எனது மனைவி இங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.
சமீபத்தில் மரணமடைந்தாரா அவரது இழப்பு உங்களால் தாங்க முடியவில்லையா என அறிஞர் கேட்கவே
அவர் இல்லை அவர் மரணமடைந்து பல்லாண்டுகள் ஆகின்றன என்றார்.
அறிஞர் வியப்பு மேலிட்டவராக வாரந்தோறும் அவருக்காகப் பிரார்த்தனை செய்யமளவிற்கு அவர் என்ன உங்களுக்குச் செய்தார் எனக்கேட்டார்.
அப்போது அவர் கூறினார்.
நான் பெரும் செல்வந்தன் ஆனால் எனது தொழில் வட்டி தொடர்பானது.
எனது மனைவி ஏழை வீட்டுப் பெண்.
திருமணம் முடிந்து எனது இல்லம் வந்தப் பின்னரே எனது வியாபாரம் வருமானம் குறித்து அறிந்து கொண்டார்.
என்னிடம் இத் தொழிலை விட்டு விடுங்கள் 
இறைவனுக்கு கடும் கோபத்தை உண்டாக்கும் இந்த வருமானம் நமக்கு வேண்டாம் என்றாள்.
நான் கேட்கவே இல்லை.
பல முறை அவள் என்னிடம் வற்புறுத்தியும் நான் காதில் வாங்கவேயில்லை.
ஒரு நாள் வெளியே சென்ற நான் வீட்டிற்கு வரும்போது அவள் பெட்டியோடு வாசலில் புறப்படத்தயாராக இருந்தாள்.
அவளிடம் அம்மா வீட்டிற்குப் போகிறாயா தாராளமாக போய்ட்டு வா எப்போது வருவாய் எனக்கேட்டேன்.
அவள் இல்லை இனி நான் வரமாட்டேன்.
எனக்கு ஹராமான(தடுக்கப்பட்ட) வருமானத்தில் வாழ விருப்பமில்லை
இறைவனிடம் நான் குற்றவாளியாக நிற்க அச்சப்படுகிறேன்.
நீங்கள் என்னை விவாகரத்துச் செய்துவிடுங்கள் என்றாள்.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.
இதுவரை பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற மமதையில் இருந்தேன்.
ஏழைப் பெண்ணாக இருப்பதால் என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இருப்பாள் என நினைத்தேன்.
ஆனால் அவள் இறையச்சமுள்ளவளாக இருந்ததால் என் பணத்தை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
என்னைத் திருத்த முயற்சித்தாள்.
நான் உடன்படாததால் என்னை விட்டு விலக முடிவெடுத்தாள்.
இது எனது வாழ்வைத் திருப்பிப்போட்டது 
வட்டித் தொழிலை விட்டேன்.
ஐவேளை தொழுகையாளியானேன்.
ஒரு மனிதனாக அவள் என்னை மாற்றினாள்.
மறுமை வாழ்விற்கு வழிகாட்டிய அவளுக்காகப் பிரார்த்திக்கிறேன் என்றார்...!

Ummar Farook

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.