நாளை புலமைப்பரிசில் பரீட்சை : அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் ஒவ்வொரு பெற்றோர்களும் அவசியம் படிக்க வேண்டிய தகவல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (18) நாடு முழுவதும் 2,894 நிலையங்களில் நடைபெறவுள்ளது.

மேலும் இம்முறை முதலில் பகுதி இரண்டு வினாப்பத்திரமே வழங்கப்படும் எனவும்
இந்த முறை அனுமதி அட்டைக்கு பதிலாக வரவுப் பதிவேடு முறை கையாளப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை நேரம் :
🔴 பகுதி II
காலை 9.30 முதல் 10.45 வரை

🔴 பகுதி I
காலை 11.15 முதல் பகல் 12.15 வரை

பெற்றோர் நேர காலத்துடன் பிள்ளைகளை பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பது அவசியமாகும். இடைவேளையின் போது பெற்றோர் பரீட்சை மண்டபத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். பிள்ளைகளுக்கு இலேசாக சமிக்கக்கூடிய உணவையும், தண்ணீர் போத்தலையும் வழங்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சை நிறைவடைந்த பின்னர் புலமைப்பரிசில் வினாப்பத்திரம் இரகசிய ஆவணம் என்பதனால் இந்த வினாப்பத்திரத்தை வைத்திருந்தல், பிரதி பண்ணுதல், பிரதி பண்ணப்பட்ட பிரதியை வைத்திருத்தல், விற்பனை செய்தல், அச்சிடுதல், பத்திரிகைகளில் வெளியிடுதல், வார சஞ்சிகைகளில் வெளியிடுதல் ஆகியவை தடை
சமூக இணையத்தளத்தில் அல்லது வேறெந்த வகையிலும் இதனை பகிரங்கப்படுத்த தடை 

மேலும் பரீட்சைகள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்துடன் 1901 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

தரம்5 புலமைப் பரிசில்  பரிட்சை தொடர்பாக

✓ பரிட்சைக்கு முந்தியதின இரவில் அதிக நேரம் படிக்கவைக்க வேண்டாம்.
✓ பரிட்சைத் தினம் அதிகாலை படிக்க வைக்க வேண்டாம்
✓ பிள்ளைகளை அமைதிப் படுத்தி ஓய்வெடுக்க வையுங்கள்
✓ பிள்ளையுடன் அன்பாக, அரவனைத்து, வாழ்த்துடன் அனுப்பி வையுங்கள்.
✓ இலகுவான காலைஉணவை கொடுங்கள்
✓ தண்ணீர் போத்தல்,இடைவேளை உணவாக சமிபாடடையும் உணவை கொடுங்கள்.
✓ பென்சில்கள், பேனை, அழிறப்பர், அடிமட்டம், கட்டர் கொடுத்து விடுங்கள்.
✓ சவர அலகு(பிளேட் கொடுக்க வேண்டாம்)
✓ பிள்ளையை உரிய நேரத்திற்கு பாடசாலை அழைத்துச்சென்று ஆசிரியரிடம் ஒப்படையுங்கள்
✓ வினாத்தாள்களை நன்றாக வாசித்துவிட்டு விடை எழுத சொல்லுங்கள்
✓ வினாப்பத்திரங்களில் விடை அழிக்கும் விதம் கூறப்பட்டுள்ளது அதனை அவதானிக்க சொல்க
✓ பகுதி1 வினாவுக்கு கோடிட சொல்க
✓ முதலாம் வினாப்பத்திரம் 14நுண்ணறிவுத்திறன் எதிர்பாக்கப் படுகிறது
✓ 5ம் வகுப்பு பிள்ளைகளிடம் அறிவுறுத்தலுக்கு ஏற்ப செயற்படும் விதம் எதிர்பாக்கப் படுகிறது
✓ பரிட்சைக்கான சுட்டெண்ணை முதலாம், இண்டாம் பக்கத்தில் தெளிவாக எழுதச் சொல்லுங்கள்
✓ தங்களது பெயரினை,பாடசாலை பெயரினை எழுத வேண்டாம் என சொல்லுங்கள்
✓ செய்கை வேலைக்காக மேலதிக தாள்கள் வழங்கப்படும் அதனை செய்து பாக்க சொல்லுங்கள்
✓ மேலதிக தாள் தேவை எனின் கேட்க சொல்லுங்கள்
✓ பிழையான விடையினை ஒரு கோட்டினால் வெட்டிவிட சொல்லுங்கள், வெட்டி காட்டுங்கள்
✓ வினாக்களை நன்குவாசித்து புரிந்து கொண்டு விடை எழுத சொல்லுங்கள்
✓ தகவல்களை ஒழுங்கமைக்கும் வினாக்களுக்கு மேலதிக தாளை பயன்படுத்தி விடைகான சொல்லுங்கள்
✓ கட்டுரைகளை விளங்கி பேச்சு மொழியில் இல்லாமல் இலக்கன மொழியில் எழுத சொல்லுங்கள்
✓ எழுத்தும் பிழைகள் இன்றி வாக்கியங்களை எழுத சொல்லுங்கள்
✓ புள்ளிக்கோட்டில் விடை எழுதும் போது சொல்இடைவெளி பேண சொல்லுங்கள்


✓ பரிட்சைகள் முடிவடைந்து வரும் பிள்ளைகளிடம் வினா தொடர்பாக கேட்க வேண்டாம்
✓ அன்றைய தினம் நன்றாக விளையாட விடுங்கள்
✓ மன அமைதியான இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்
✓ பிள்ளையின் விடுதலை தினமே அத்தினம் என நினைவில் வையுங்கள்
✓ வினாக்கள் தெரிய வந்தால் பிள்ளையிடம் அது தொடர்பாக கேட்காதீர்கள்
✓ கூடுதலான புள்ளி பெற்றாலும், பெறாவிட்டாலும் நமக்கு பிள்ளையே மிக முக்கியம் என நினைவில் வையுங்கள்


நாளை பரீட்சை எழுதும் சிறார்களுக்கு சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

- ரிகாஷ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.