மாவட்ட இன விகிதாசாரப்படி தொழில், காணி, உயர் நியமனங்கள்... வழங்கப்படவேண்டும். 
அரச ஆதரவு முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை

நாட்டின் சகல மாவட்டங்களிலும் கல்வி, தொழில்வாய்ப்புக்கள், காணிப் பகிர்வு அரச நியமனங்கள் என்பன அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசார அடிப்படையில் வழங்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்கு பாராளுமன்றத்தில் அரச தரப்பு முஸ்லிம் குழுவொன்று தீர்மானித்துள்ளது. 
இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த சில தினங்களில் கூட்டவுள்ள உயர்மட்ட மாநாட்டுக்கு முஸ்லிம்கள் சார்பில் இக்கோரிக்கையை உள்ளடக்கிய மகஜரொன்றை கையளிக்கவிருப்பதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழுத் தலைவருமான அலி சப்ரி ரஹீம் நியூஸ் பிளஸ்ஸூக்கு தெரிவித்தார். 
பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ள10ராட்சி மன்றங்களில் அந்தந்த மாவட்ட இன விகிதாசாரம் பேணப்படுவதை வலியுறுத்தி இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். 
இத்துறைகளில் சமத்துவம் பேணப்படாமை காரணமாக சமூகங்களில் அதிருப்தி நிலவுவதாக தெரிவித்தார். நாட்டின் 24 மாவட்டங்களில் ஒருவர் கூட முஸ்லிம் அரசாங்க அதிபராக நியமிக்கப்படாமை, 168 நாடுகளின் வெளிநாட்டுத் தூதுவர்களில் ஐந்து பேருக்குக் குறைந்தோரே முஸ்லிம்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை என்பதனை சுட்டிக்காட்டிய அலி சப்ரி, சகல மாவட்டங்களிலும் அரச நியமனங்கள், அரச வளங்கள் பகிரப்படுவது அந்தந்த மாவட்டத்தின் இன விகிதாசாரத்தை பேணி மேற்கொள்ளப்படுவதின் அவசியத்தையும் இந்த அறிக்கையில் உள்ளடக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் அரசுக்கு ஆதரிக்கும் உறுப்பினர்களது ஆதரவு கிடைத்துள்ளதாவும், ஏனையவர்களது ஆதரவை பெறுவது பற்றி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.