விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் பிடி நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய கொள்கை உப குழுவின் செயற்குழுவில் கலந்துரையாடப்பட்டது.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் கீழ் உருவாக்கப்பட்ட விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் பிடி நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன தலைமையில் அண்மையில் (02) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் பிடித்துறை என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சுக்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட பல தரப்பினர் கலந்துகொண்டனர்.

இதற்கமைய, இந்த செயற்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன இந்தத் தரப்பினருடன் கலந்துரையாடி சம்பந்தப்பட்ட துறை தொடர்பில் கருத்துக்களை பெற்றுக்கொண்டதுடன், ஒரு மாத காலத்துக்குள் இந்தத் துறைகள் இணைந்த விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் பிடி நடவடிக்கைகள் தொடர்பில் கொள்கையொன்றைத் தயாரித்து செயற்குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு பரிந்துரைத்தார்.

அந்தக் கொள்கையை குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவுக்கு முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.