சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் செம்மணியில் உள்ள யாழ் நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்க சிலை இன்றைய தினம் (07) காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண நகருக்குள் நுழைவோர் சிவபெருமானை வணங்கி புனிதமாக நுழைய வேண்டும். அதேபோல் குறித்த வீதியில் பயணிப்போர் பாதுகாப்பாக இறை பக்தியோடு பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் இந்த சிலை உருவாக்கப்பட்டதாக சிவ பூமி அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.