♦️POLICE.   எச்சரிக்கை 

 பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை !!  போதைப்பொருள் கலந்த டொபி, சொக்லட், லொலிபாப்கள் மற்றும் மாத்திரைகள் எனப் பல்வேறு வழிகளில் போதைப் பொருட்கள் பாடசாலைகளுக்குள் நுழையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.  எனவே இது குறித்தும், அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பெற்றோர்கள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் என பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பணிப்பாளர் ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.  பாடசாலை செல்லும் மாணவர்கள் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். “சமூகத்தில் உள்ள பல்வேறு சவால்களை ஒரேயடியாக நிறுத்த முடியாது.  டொபி, சொக்லட் மாத்திரைகள் என பல்வேறு வழிகளில் போதைப் பொருட்கள் பாடசாலைகளுக்குள் நுழைந்துள்ளன. பெற்றோர்கள் இதைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களுக்கு இது பற்றி கூறுங்கள்.  பிள்ளைகளை நம்புங்கள் மற்றும் அவரைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள், இதனால் பிள்ளைகள் மீது அவநம்பிக்கை ஏற்பட கூடாது. பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும்போது, ​​வகுப்பிற்குச் செல்லும்போது பழகும் நண்பர்கள், ஞாயிறு பாடசாலை பழகும் நண்பர்கள் யார், பாடசாலைக்கு செல்லும்போது என்ன செய்கிறார்கள், இவற்றைப் பற்றி எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கவனித்துக் கொண்டால், பிள்ளைகள் போதைக்கு அடிமையாக மாட்டார்கள். எனவே, எவ்வளவு வேலைகள் அதிகாக இருந்தாலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கவனித்துக் கொள்ள வேண்டும்” என பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பணிப்பாளர் ரேணுகா ஜெயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பு : 
பாடசாலை மற்றும் இதர இடங்களில் மேற்கூறப்பட்ட பொருட்களோ பிஸ்கட் மற்றும் தண்ணீர் போன்றவை  இலவசமாக கிடைக்குமிடத்து அவர் எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும் அவற்றை பாவிக்க வேண்டாமென பாலர் முதல் உயர்தரம் வரையான அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அறியப்பண்ணுங்கள் . மிக அவதானமாக இருங்கள் !!

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.