LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களை பெற்றது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் அதிகபட்சமாக 41 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் சாமிக்க கருணாரத்ன 4 விக்கெட்டுக்களையும், ஓஷேன் தோமஸ் மூன்று விக்கெட்டுக்களையும் மற்றும் இசுரு உதான இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, 107 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி ஃபால்கன்ஸ் அணி 16 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் கமிந்து மெந்திஸ் 51 ஒட்டங்களையும் என்ரூ பிளட்சர் 44 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.