பைத்துல் முகத்திஸ் பள்ளிவாசலின் இமாம் இலங்கை விஜயம் - பொருளதார மேம்பாட்டுக்காவும் துஆப் பிரார்த்தனை (படங்கள்)

பைத் அல்  முகத்திஸ் பள்ளிவாசலின் பிரதான இமாம்  அலி உமர் அல் அப்பாஸி கண்டி கட்டுக்கலைக்கலை ஜம்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் விஜயம் மேற்கொண்டார்

கண்டி  கட்டுக்கலை ஜம்ஆப் பள்ளிவாசலின் தலைவர் அப்சால் மரைக்கார் மற்றும் நிர்வாகத்தினர் ஆகியோரை அழைப்பை ஏற்று  வருகை தந்த பைத் அல்  முகத்திஸ் பள்ளிவாசலின் பிரதான இமாம் அலி உமர் அல் அப்பாஸி  கண்டி கட்டுக்கலைக்கலை ஜம்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொண்டார்.

கட்டுக்கலை அல் புர்க்கானிய்யா அரபு அரபுக் கல்லூரி மாணவர்களின் விசேட வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் நேற்றைய விசேட வெள்ளிக்கிழமை ஜம்ஆப் சொற்பொழிவினையும் ஜும்ஆத் தொழுகையினையும் பைத் அல்  முகத்திஸ் பள்ளிவாசலின் பிரதான இமாம்  அலி உமர் அல் அப்பாஸி நடத்தி வைத்தார்.

அவர் இந்நாட்டின் சுவிட்சத்திற்காகவும் பொருளதார மேம்பாட்டுக்காவும் விசேட துஆப் பிரார்த்தனை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் தேசியத் தலைவரும் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் , கண்டி மாவட்டப் பள்ளிவாசல்கள் சேம்மேளனத்தின் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இக்பால் அலி

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.