இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

கடந்த நவம்பர் மாதம் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து கிடைத்த வருமானம் தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.  

இதன்படி, நவம்பர் மாதத்தில் மாத்திரம் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து கிடைத்த வருமானம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.  

கடந்த நவம்பர் மாதம் சுமார் 52 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் வருகை தந்த ஆகக்கூடுதலான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையாகவும் அது பதிவாகியது.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக நவம்பர் மாதத்தில் மட்டும் 107மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வருமானமாக கிடைத்துள்ளது. 

கடந்த செப்டம்பரில் 54 மில்லியன் டொலர்களாகவும், ஒக்டோபரில் 75.6 மில்லியன் டொலர்களாகவும் காணப்பட்ட சுற்றுலாத்துறை மூலமான வருமானம் நவம்பரில் நூறு மில்லியன்களைத் தாண்டியுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை 1129.4 மில்லியன் டொலர்கள் சுற்றுலாத்துறை மூலமான வருமானமாக இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.