கஹட்டோவிட்ட அல் அக்பர் பாலர் பாடசாலையின் 28வது வருட இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய மைதானத்தில் இன்று (04) மிகவும் கோலாகலமான முறையில்  நடைபெற்றது.

இரண்டரை தசாப்தங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் அல் அக்பர் பாலர் பாடசாலையின் 28வது விளையாட்டுப் போட்டிகள் ஆசிரியை ஆயிஷா இக்பாலின் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 நவ லங்கா நிதஹஸ் பக்ஷய கட்சியின்  கம்பஹா மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ் ருஷ்தி உஸ்மான், அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர்களான நஜீம், இன்சாப் மற்றும் ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுஹைல் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.