கால்நடைகளின் திடீர் உயிர் இழப்புக்கு தொற்றுநோய் காரணம் அல்ல : ஆய்வு அறிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்தமைக்கான காரணம் குளிரால் ஏற்பட்ட அதிர்ச்சியே என விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1,660 பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ளன. அதிக எண்ணிக்கையிலான பிற விலங்குகளும் முக்கியமானவை. இந்த திடீர் மிருக மரணங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தி அறிக்கையை வழங்குமாறு விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதன்படி, பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், கால்நடை மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை விவசாய அமைச்சரிடம் கையளித்துள்ளது. அதற்கமைய, குறித்த விலங்குகள் இறந்ததற்குக் காரணம் தொற்றுநோய் அல்ல, மாறாக கடுமையான குளிரால் ஏற்பட்ட அதிர்ச்சியே காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள்