சம்மாந்துறை பிரதேச இளைஞர் நல்லிணக்க குழு உறுப்பினர்களினால் ஸ்ரீ கோரக்கர் பிள்ளையார் ஆலயத்தில் சிரமதான பணி..!


ஜிசேர்ப்(GCERF)நிறுவனத்தின் நிதியுதவியுடன்  ஹெல்விடாஸ்(HELVETAS) அனுசரணையில் சமாதானமும் சமூக பணி(PCA)நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச்(Y-CHANGE) திட்டத்தின், 
கீழ் உள்ள சம்மாந்துறை பிரதேச இளைஞர் நல்லிணக்க குழு உறுப்பினர்கள் ஒன்றினைந்து சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் பிள்ளையார் 
கோயிலில் சிரமதான பணி இன்று(30) முன்னெடுக்கப்பட்டது.

இதில் மும்மதங்களை பிரதிபலித்து இந்து,முஸ்லிம் மற்றும் கிருஸ்தவ இளைஞர்கள்,
யுவதிகள்,ஆலய நிர்வாகத்தினர்கள்,பொது மக்கள் 
ஒன்றிணைந்து சிரமதான பணியினை மேற்க்கொண்டனர்.

சமாதான தொண்டர் எம்.எம்.எம்.அஹ்னாபின் வழிகாட்டலில் சம்மாந்துறை பிரதேச இளைஞர் நல்லிணக்ககுழுவின் தலைவி ஏ.சிபானாவின் தலைமையில் இடம்பெற்றதுடன்,இதன் போது வை-சேன்ச் (Y-CHANGE) திட்டத்தின் திட்ட இணைப்பாளர் ஐ.சுதாவாசன், நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் கே.டி.ரோகிணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

(எம்.என்.எம். அப்ராஸ்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.