மீண்டும் சேவைகளை ஆரம்பிக்கவுள்ள பலாலி விமான நிலையம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (05) நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.