2023 இல் மட்டக்களப்பை சிறந்த சுற்றுலாத் தலமாக மாறுகிறது. 

மட்டக்களப்பு மாவட்டத்தை  சுற்றுலாத்துறையாக தலமாக மாற்ற  காணிகளை அடையாளம் காணும் கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

எந்தவொரு அரசியல் தலைமைகளுக்குமின்றி நடைபெற்ற இவ் கலந்துரையாடலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள  வெருகல்-ஆறு தொடக்கம் மட்டக்களப்பு வரையான அரச மற்றும் தனியார் துறையினருக்கு சொந்தமான கரையோர காணிகளை அடையாளம் காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன் அடிப்படையில் இப்பிரதேசத்தை சுற்றுலா வலயமாக உடன் அபிவிருத்தி செய்து மட்டக்களப்பை 2023 ஆம் ஆண்டில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவது இதன் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே கருணாஹரன் உட்பட ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமைப் பணிப்பாளர் சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் டபிள்யூ.ஏ.சூலானந்த பெரேரா, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.சி.எம். ஹேரத் மற்றும் லைன் நிறுவனங்களின் தலைவர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.