அதிக விடுமுறையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு ஐந்தாம் இடம்!
உலகில் அதிக விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலின்படி இலங்கைக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. இலங்கைக்கு முன்னால் ஈராக் உள்ளது.
ஈராக் இந்த ஆண்டு 26 நாட்கள் விடுமுறைகளை அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் இலங்கை நாளை (26) சிறப்பு கிறிஸ்துமஸ் விடுமுறையுடன் 25 வருடாந்திர விடுமுறைகளை அறிவித்துள்ளது.
2019ம் ஆண்டு நிலவரப்படி, கம்போடியா அதிக விடுமுறைகளைக் கொண்ட நாடாக இடம்பிடித்துள்ளது,
அதே நேரத்தில் இலங்கை அந்த ஆண்டில் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது, இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்தது.