சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணியில் இணைகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் அரங்கில் கடைசியாக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக பங்கேற்றார். உலக கோப்பை தொடருக்கு முன் இதில் இருந்து விலகினார். புதிய அணியில் இணைய பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது சவுதி அரேபியாவின் அல்–நாசர் அணிக்காக இரண்டரை ஆண்டு ஒப்பந்தத்தில் ரொனால்டோ விளையாட ஒப்பந்தம் ஆனார்.
தற்போது துபாயில் உள்ள இவர், வரும் ஜன. 1 முதல் இந்த அணிக்காக விளையாட உள்ளார். இதற்காக ஆண்டுக்கு ரூ. 1793 கோடி தர முன்வந்துள்ளது அணி நிர்வாகம். இதையடுத்து ரொனால்டோவின் மாத சம்பளம் ரூ. 149 கோடியாக இருக்கும். வார சம்பளம் ரூ. 34.5 கோடி வரை கிடைக்கும்.