காத்தாங்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடிநொச்சிமுனை பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்லடி நொச்சிமுனையைச் சேர்ந்த பிரபல வைத்தியர் ஒருவரின் மகனான அகிலன் துஷ்யந்தன் (18) என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்தவராவார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயிரியல் துறையில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவன்,

தனது வீட்டில் வளர்க்கும் நாயை அடித்ததனால் அதனை கேட்டு அவரின் தந்தை திட்டியதாகவும், 

அதனையடுத்து மனமுடைந்த மாணவன் கடந்த 5ஆம் திகதி தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் மேல் மாடியில் உள்ள சமையலறையில் தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.