2022 முதல் காகிதமில்லா மின்பட்டியல் உட்பட  பற்றுச்சீட்டும் !

ஜனவரி மாதம் முதல் காகிதமில்லா மின்பட்டியல் மற்றும் பற்றுசீட்டு முறையினை  அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் காகிதமில்லா மின்பட்டியலை அறிமுகப்படுத்தல் தொடர்பிலும், தெரு விளக்குகளை முறையாக பொருத்துதல் மற்றும் இயக்குவதை ஒழுங்குபடுத்தல் குறித்தும் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதே வேளை வெளி மின்சாரம் சம்பந்தமான சேவைகள் மற்றும் இலங்கை மின்சார சபையால் செய்ய முடியாத வேலைகளை உள்ளூராட்சி சபைகளின் ஆதரவுடன் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.