நியுஸிலாந்தின் புதிய டெஸ்ட் கேப்டன்!

நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். புதிய கேப்டனாக சவுதி பொறுப்பேற்கிறார். 346 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள சவுதி, 22 முறை டி20 அணியை வழிநடத்தியுள்ளார். இந்தமாதம் பாகிஸ்தானுக்கான டெஸ்ட் சுற்றுப்பயணத்தின்போது சவுதி கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். அவர் நியூசிலாந்தின் 31வது டெஸ்ட் கேப்டனாவார். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து கேன் வில்லியம்சன் கூறும்போது, அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது இது நேரம் சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை. என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட் என்பது விளையாட்டின் உச்ச நிலையாகும்ம் டெஸ்டில் அணியை வழிநடத்தும் சவால்களை நான் அனுபவித்தேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் இந்த முடிவுக்கான நேரம் சரியானது என்று உணர்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். வில்லியம்சன் 2016 இல் பிரெண்டன் மெக்கல்லத்திடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து 38 போட்டிகளின் நியூசிலாந்து (22 வெற்றி, 8 டிரா, 10 தோல்வி) டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்