மூளையில் ஏற்படும் அனியூரிசம் நோயை குணப்படுத்தி யாழ். வைத்தியசாலை மீண்டும் சாதனை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட மூளையில் ஏற்படும் அனியூரிசம் (Brain aneurysm) எனப்படும் நோயை சீர்செய்யும் (Endovascular Embolization) சிகிச்சை மூலம் தாயொருவர் நலம் பெற்றுள்ளார்.

இதுவரை காலமும் இந்நோய்க்கு சத்திரசிகிச்சை (Surgical clipping) முறை மூலம் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரத்தக் குழாயினூடாக மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சையின் மூலம் தொற்று (Infection) ஏற்படும் வாய்ப்புகள் மிக குறைவு என்பதுடன், குறைந்த நாட்களில் நோயாளி வழமை போல் இயங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.