FIFA உலகக் கோப்பை கத்தார் 2022: மொராக்கோவின் வரலாற்று வெற்றிக்கு உலகத் தலைவர்கள், பிரபலங்கள் பாராட்டு

நேற்றிரவு மொராக்கோ அணி அரையிறுதிக்கு தகுதி பெற்ற உடனேயே கத்தார் எமிர்  குழந்தைகளுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

நேற்றைய ஆட்டத்தில் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியை வெளியேற்றி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது மொராக்கோ அணி.

அல்துமாமா மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ – போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ இல்லாமல் களமிறங்கியது போர்ச்சுகல். இம்முறையும் ரொனால்டோ ஆடவில்லை.

பரபரப்புடன் ஆட்டம் தொடங்கிய நிலையில் இரு அணிகளும் கோல் போஸ்ட்டை வாய்ப்பு கிடைக்கும்போது நெருங்கின. ஆனால் ஒவ்வொரு முறையும் இரு அணிகளும் சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்த கோல் கனவு கைகூடவில்லை.

கடந்த போட்டியில் ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்டு ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய 21 வயதான கோன்காலோ ரமோஸ்மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப ஆட்டத்தின் இரண்டாவது நிமிடமே கோல் அடிக்க முயன்றார். ஆனால் அது கைகூடவில்லை.

யாரும் எதிர்பாராத விதமாக ஆட்டத்தின் முதல் பாதிக்கு முன்பாக 42வது மொராக்கோ வீரர் யூசெப் என்-நெசிரி கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1 – 0 என்ற கணக்கில் மொராக்கோ முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது போர்ச்சுகல். இதனால், ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ களம்புகுந்தார். ஆனால் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை.

இரண்டாம் பாதியில் மொராக்கோவின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ரொனால்டோ இருமுறை முயன்றும் அது மொராக்கோ கோல் கீப்பர் யாசின் பௌனௌவால் திறம்பட தடுக்கப்பட்டது.

இதனால், பௌனௌ தடுப்பாட்டத்தால் போர்ச்சுகல் பரிதாபமாக வெளியேறியது. இறுதியில் 1 – 0 என்ற கணக்கில் போர்ச்சுகல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ.

இதன்மூலம் ஃபிஃபா உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க அணியாக வரலாறு படைத்தது.

36 வருடங்களுக்கு முன்பு மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை பெற்றிருந்தது மொராக்கோ.

தற்போது கத்தார் உலகக் கோப்பையில் முதன் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

ஏன் மொராக்கோ வெற்றி முக்கியம்?

பிரேசில் வீழ்த்தி குரோஷியா அணி அரையிறுதிக்கு முன்னேறியதை விடவும், போர்ச்சுகல் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய மொராக்கோ அணியின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் 92 ஆண்டு கால உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாகஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு அணி அரையிறுதி தகுதி பெற்றுள்ளது.

நட்சத்திர வீரர்கல் நிரம்பி இருந்த போர்ச்சுகலை அணியை திறமையை மட்டுமே நம்பி வந்த மொராக்கோ அணி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த வெற்றிக்கு மொராக்கோ வீரர்கள் பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று தனது அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்ற பிறகு மொராக்கோ வீரர் ஒருவர் நேற்று இந்த முக்கியமான தருணத்தைச் செய்தார். அம்மாவுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வது ஒவ்வொரு மகனுக்கும் சிறந்த தருணம்.

ஒவ்வொரு வெற்றிக்கும் எல்லாம் வல்ல இறைவனின் அருள் வேண்டும். எனவே இறைவனை நினைவு கூர்வதும், அவருடன் தொடர்பு வைத்திருப்பதும் வெற்றிக்கு வழி. மொராக்கோ வீரர்களிடமிருந்து எமக்கு சிறந்த  ஒரு பாடம்.

ஆப்பிரிக்கா மற்றும் அரபு மொழி பேசும் மத்திய கிழக்கில் பரவலாக கொண்டாடப்படும், கால்பந்தில் மிகப்பெரிய பரிசுக்கான போட்டியில் தங்கள் அணிகளில் ஒன்றைக் காண ஆசைப்படும்.

துபாயின் துணை ஆட்சியாளரும், துணைப் பிரதமரும், நிதி அமைச்சரும், துபாய் நீதி மன்றத்தின் தலைவருமான ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம், ஃபிஃபா உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகலை வீழ்த்திய மொராக்கோ அணிக்கு ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.