சிட்டகாங்: இந்தியா, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி இரட்டை சதமடித்தார். அவர் 131 பந்துகளில் 210 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 91 பந்துகளில் 113 ரன்களுக்கு வெளியேறினார்.
இந்நிலையில், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 400 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

மேலும், அதிக முறை 400 ரன்கள் எடுத்த பட்டியலில் 6-வது முறையாக 400 ரன்களை கடந்துள்ள இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.