இன்று நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது நோக்குநர் பதவிக்காக நானும் சென்றிருந்தேன். குறித்த பாடசாலையில் பரீட்சை எழுதிவிட்டு வெளியே வந்த ஒரு மாணவன் தனது பையினுள் இருந்து புறாவொன்றை வெளியே எடுத்து வானத்தில் சுதந்தமாகப் பறக்கவிட்டிருக்கின்றான். 
      மேற்படி நிகழ்வினை நேரடியாகஅவதானித்துக்கொண்டிருந்த பொற்றோர் ஒருவர் என்னிடம் இதனைக் கூறினார். 
குறித்த அந்த மாணவன் வீட்டிலிருந்து வரும் போதே புறாவினைத் தனது பையினுள் கொண்டு வந்திருக்க வேண்டும். பரீட்சை எழுதுகின்ற வேளையில் கூட புறா பையினுள் தான் இருந்திருக்க வேண்டும். புறாவினைப்போலவே அடைபட்டிருந்த நானும் சுதந்திரமாகப் பறக்க வேண்டும் என்ற ஓர் உணர்வு குறித்த மாணவனிடத்தில் இருந்திருக்கலாம்.  உண்மையிலேயே இது குறித்து நாமும் பெற்றோரும் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். 
  தரம் 5 மாணவர்களைப்பொறுத்தவரைக்கும் இன்றைய தினம் சுதந்திர நாள் தான் . கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக மேலதிகவகுப்புக்கள், onlineவகுப்புக்கள், paper class......என  ஒரு வகையான இருக்கமான வாழ்வுக்கு பழக்கப்பட்டிருந்த அந்த சின்னஞ்சிறுசுகள் தமது வயதையும் மீறிய கால அட்டவணைக்கு  இயங்கிக்கொண்டிருந்ததை மறுக்க முடியாது. பல மாணவர்கள் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள் என்பதுவும் உண்மையாகும்.
  எனவே  மேற்படி அவதானிக்கப்பட்ருந்த நிகழ்வானது பரீட்சை முடிவடைந்தது,  என்பது பூரண சுதந்திரம்பெற்ற உணர்வை  மணவர்கள் மத்தியில் வெளிக்காட்டுகின்றது. 
   மேற்படி பரீட்சை தரம் 8க்கு மாற்றப்பட வேண்டும் என பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தாலும்....
காலம் தான் பதில் சொல்லும்.

Raeesa Razzak

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.