சிந்தனைக்காக......


பாரபட்சமின்றி சகல பிள்ளைகளிடத்திலும் சமத்துவத்தைப் பேண வேண்டிய பாரிய பொறுப்பு அவர்களைச் சாரும் . ஒருவகுப்பறையை எடுத்துக் கொண்டால் அங்கே சகலரும் ஒரே தரத்தில் உள்ளவர்களாக இருப்பதில்லை.அது கல்வியிலும் சரி,பொருளாதாரத்திலும் சரி,சமூக அந்தஸ்த்திலும் சரி.ஆனால் ஒரு ஆசிரியருக்கு இவர்கள் யாவரும் ஒரே விதமானவர்களாகவே இருக்க வேண்டும்.ஆம் அது மாணவர் என்ற அந்த ஒரு பிரிவினராகவே இருக்க வேண்டும்.

அவர்களில் மீத்திறன் கூடியவர்களும் இருக்கலாம்,மெல்லக் கற்போரும் இருக்கலாம்.சிலருக்கு நுண்ணறிவு த்திறன் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மொழிப்புலமை இருக்கலாம்.சிலருக்கு சிறந்த பேச்சாற்றல் இருக்கலாம்,இன்னும் சிலருக்கு சிறந்த ஓவியத் திறமை இருக்கலாம்.இவ்வாறு எத்தனையோ....

இங்கு யாரையும் விட யாரும் உயர்ந்தவருமில்லை தாழ்ந்தவருமில்லை.பிள்ளைகள் எப்போதும் தங்களுக்குள் எந்தப் பாகுபாட்டையும் காட்ட மாட்டார்கள்,ஆசிரியர்களாகிய நாம் அவர்களை வேறுபடுத்திப் பார்க்காத வரை....

சொந்தப் பிள்ளையா,உறவுப் பிள்ளையா,தெரிந்தவர் பிள்ளையா, சக பாடியின் பிள்ளையா,படிக்கும் பிள்ளையா,படிக்காத பிள்ளையா,இவ்வாறான எந்த வேறுபாடுகளும் அற்ற ஒரு இடமாகவே எமது வகுப்பறைகள் களும்,பாடசாலைகளும் இருக்க வேண்டும்.அங்கு மட்டும் தான் சிறந்த மாணவச்சமுதாயத்தை உருவாக்க முடியும்.
எனவே எப்போதும்,எவ்விடத்திலும் ஒரு பிள்ளையை உயர்வாகவும்,ஏனைய பிள்ளைகளை தாழ்வாகவும் நோக்காது சகலருக்கும் சம உரிமைகளை வழங்கி,என்றும் எம் மாணவர் உள்ளங்களில் உயர்ந்த நிலையில் இருக்கும் ஆசான்களாக மிளிர்வோம்....

Ummu Deedaat

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.