அகில இலங்கை YMMA பேரவையின் கஹட்டோவிட்ட கிளை ஏற்பாட்டில் அப்பியாசக் கொப்பிகள் வழங்கல் மற்றும் கலாசார நிகழ்வுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிக்கா மகா வித்தியாலயத்தின் பஸால் ஆப்தீன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

நிகழ்வில் பிரதம அதிதியாக அத்தனகல்ல பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் சமீர ஜயவர்தன கலந்து கொள்ளவுள்ளார். 

விஷேட அதிதிகளாக அகில இலங்கை YMMA பேரவையின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட பணிப்பாளர் நஸாரி காமில், An Noor Charity Association இன் ஸ்தாபகர் ரிப்கி ரம்ஸான் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கௌரவ அதிதிகளாக அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கால்லே தம்மின்த நாயக்க தேரர், திஹாரிய இப்ராஹிமிய்யா மஸ்ஜிதின் ஆலோசகர் அஷ்ஷெய்க் முனீர் முளப்பர் (நளீமி), Revd.Fr.கிருள் ஜயனாத் சில்வா (நிட்டம்புவ சென் அந்தனீஸ் தேவாலயம்) மற்றும் Revd.Fr.சுரங்க சந்தன டி மெல்  (வெயாங்கொடை சென் விர்ஜின் மேரிஸ் தேவாலயம் மற்றும் மீரிகம சென் பீற்றர்ஸ் தேவாலயம்) ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

தகவல் : அல்ஹாஜ் பிர்தவ்ஸ் JP, தலைவர் - அகில இலங்கை YMMA பேரவையின் கஹட்டோவிட்ட கிளை 
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.