எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 9 மாவட்டங்களில் கை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது.


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களும் அதில் உள்ளடங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய மாவட்டங்கள் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

குறித்த மாவட்டங்களில் மயில் சின்னத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது.

ஏனைய சில மாவட்டங்களில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டிணைந்து போட்டியிடுவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியிலிருந்தும், கட்சியின் பதவி நிலைகளில் இருந்தும் தாம் விலகுவதாக, அதன் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான பைஸர் முஸ்தப்பா அறிவித்துள்ளார்.

இதற்கான தமது பதவி விலகல் கடிதத்தை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனவுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.