A/L பரீட்சைக் காலத்தில் மின்வெட்டு அமுலாகுமா?

TestingRikas
By -
0
A/L பரீட்சைக் காலத்தில் மின்வெட்டு அமுலாகுமா?

ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதிகளில் மின்வெட்டு ஏற்படுமா, இல்லையா என்பது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

“பரீட்சைக் காலத்தில், பரீட்சைகள் ஆணையாளரிடம் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தற்போது தயாரித்து வருகிறோம். அதற்கான செயற்பாடுகளை இன்று ஆரம்பித்துள்ளோம். மிகவும் நியாயமானது, எனவே அட்டவணையை மாற்றுவோம்.

மின்வெட்டை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்த அமைப்பைத் தயாரிக்குமாறு பரீட்சை திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளோம். தேவையான ஆவணங்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் நாங்கள் ஏற்கனவே வெற்றுள்ளோம்." என்றார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)