கம்பளை நகரில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் தானியங்கி (ATM) இயந்திரமொன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.

ATM இயந்திரத்தை கொள்ளையிட்ட ஆயுதங்களுடன் வந்த சிலர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இன்று(25) அதிகாலை வேனொன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வங்கி பாதுகாவலரை அச்சுறுத்தி இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட பணத்தின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.