திங்கட் கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறையா? கல்வி அமைச்சர் வெளியிட்ட செய்தி!

தைப்பொங்கல் தினத்துக்கு மறுநாள் திங்கட்கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்ந்து வந்தது. 

எனினும், விடுமுறை வழங்காதிருக்க தீர்மானித்திருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். 

இந்த தவணைக்கான பாடசாலை நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையை கருத்திற் கொண்டும், எதிர்வரும் 20 திகதி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்காக விடுமுறை வழங்கப்படுவதனாலும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.