⏩ ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உடுகம்பல அலுவலகம் மீண்டும் மக்கள் சேவைக்காக திறக்கப்படவுள்ளது...

⏩ தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இருந்தாலும், தேர்தலை நடத்துவதற்கு நாட்டின் தற்போதைய சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்...

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு


ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உடுகம்பலை அலுவலகம் மீண்டும் மக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டது.


இந்த அலுவலகம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தலைமையில் இன்று (27) திறந்து வைக்கப்பட்டது.


கடந்த மே மாதம் 9ஆம் திகதி அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உடுகம்பலையில் உள்ள வீடு, அலுவலகம் மற்றும் கேட்போர் கூடம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றாக தீயினால் அழிக்கப்பட்டன. அன்று முதல் இன்று வரை உடுகம்பளை அலுவலகத்தில் பொது மக்கள் தினத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. திரு.பிரசன்ன ரணதுங்கவின் வீடு மற்றும் அலுவலகத்தை செயற்பாட்டாளர்கள் எரித்த பின்னர், அலுவலகம் மற்றும் கேட்போர் கூடம் புனரமைக்கப்பட்டுள்ளன. இதன் கட்டுமானப் பணிகள் திரு. ரணதுங்கவின் தனிப்பட்ட செலவில் செய்யப்பட்டுள்ளது.


அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, வீடுகளுக்கு தீ வைப்பதன் மூலம் தனது அரசியல் கொள்கையை அழிக்க முடியாது என தெரிவித்தார்.


இவ்வாறான செயல்களின் ஊடாகப் புடம் போடப்பட்ட  பின்னர் எதிர்காலத்தில் சகல சவால்களையும் அச்சமின்றி எதிர்கொள்வேன் என திரு.ரணதுங்க வலியுறுத்தினார்.


மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது:


“மே 9ஆம் திகதி பயங்கரவாதக் குழுக்களின் போராட்டத்தின் விளைவாக எனது வீடு, அலுவலகம், பொது வசதிகள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கும் கூடம் ஆகியவை எரிக்கப்பட்டன. தற்போது நாம் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். அரசியல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். உடுகம்பளையில் அதே இடத்தில் மீண்டும் அலுவலகத்தைத் தொடங்கினோம்.


இன்று வரை வீடுகள் சேதம் அடைந்தவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவில்லை. அதற்கு மதிப்பீட்டுத் திணைக்களமும் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். காவல்துறைதான் இதனை செய்ய வேண்டும். இழப்பீடுகள் வழங்குவதற்கு   அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீ எரிப்பால் பல எம்.பி.க்களும், அவர்களது குடும்பத்தினரும் மிகவும் ஆதரவற்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர்.


பொலிஸாரும் இராணுவத்தினரும் இருந்த இடத்திலேயே இந்த வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அதனால் தான் மக்கள் பணத்தில் எங்களுக்கு இழப்பீடு தர வேண்டாம் என்கிறோம். இவற்றிற்கு பொறுப்பான குழுக்கள் உண்டு, இவற்றை தீயிட்டு கொளுத்தும் குழுக்கள் உண்டு, இவர்களிடம் பணம் வாங்கி எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து.


இன்று இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நாட்டை தற்போதைய நிலையில் இருந்து மீட்பதற்கு எமது தனிப்பட்ட விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தீயினால் வீடுகள் அழிக்கப்பட்ட எம்.பி.க்கள் உட்பட அனைவரும் இன்று பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சவாலை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த இழப்பீடு என்றாவது ஒரு நாள் கிடைத்துவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து வேட்பு மனுக்களையும் சமர்ப்பித்துள்ளோம். எங்களிடம் நல்ல வேட்பாளர்கள் குழு உள்ளனர். அந்த வேட்பாளர்கள் அனைவரும் கிராமங்களுடன் தொடர்புள்ளவர்கள்.  நாங்கள் முன்வைத்த அனைத்து வேட்பாளர்களும் கிராமங்களில் பணியாற்றியவர்கள். வேறு வாய்ச் சவடால் விட்டவர்கள் அல்ல. வேட்பாளர்கள் வீடுகளுக்கு வரும்போது அவர்களின் வரலாற்றைப் பார்க்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக்கொள்கிறேன். வீடுகளுக்கு தீ வைத்து, கொள்ளையடித்து அடையாள அட்டை சேகரித்தவர்களா? அல்லது கிராமத்தில்  பாதைகள் அமைத்து, தெருவிளக்கு போடல், சாவு வீட்டிற்கு கூடாரம் அமைத்து கொடுத்து, அன்றாட தேவைகளில் ஈடுபட்டவர்களா? என்று  மக்கள் முடிவு செய்யுங்கள். வாக்காளர் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் நமக்குப் பிரச்சினையே இருக்காது.


தேர்தலை ஒத்திவைக்க எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. தேர்தலை விட நாட்டை வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து மீட்க அரசாங்கம் செயற்பட வேண்டும் என்ற கருத்து நாட்டில் நிலவுகிறது. ஆனால் அது எனக்குத் தெரியாது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.


அரசியல் கட்சி என்ற வகையில், தேர்தலுக்கு நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம். தேர்தல் ஆணையாளருக்கு ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் உள்ளது. தேர்தல் ஆணையத்தில் பிளவுகள் இருக்கின்றன.  சிலர் ராஜினாமா செய்கிறார்கள். இது பெரும் நெருக்கடிக்கு சென்றுள்ளது. தேர்தல் ஆணையம் ஒரு சுயாதீன ஆணையமாக நியமிக்கப்படும்போது, ​​தேர்தல் ஆணையத்துக்கு பொறுப்பு உள்ளது. தேர்தல் நடக்குமா? இல்லை? அவர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளதா? முறை சரியானதா? என்பதை  அவர்களைப் பார்க்கச் செல்ல வேண்டும்.


தேர்தல் ஆணையாளர்  என்ன சொல்கிறாரோ அதற்கு நாங்கள் தயார். அரசாங்கம் ஏன் எல்லாவற்றையும் சொல்கிறது? தேர்தல் ஆணையத்தை சுதந்திரமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 19வது அரசியலமைப்பில் நாம் அதைச் செய்த பின்னர் அவர்கள் செய்வதற்கு ​ அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது. இதற்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பேற்க வேண்டும். இது ஒரு சுதந்திரமான நிறுவனம்.


எதிர்க்கட்சியில் இருப்பவர்கள்  முட்டாள்கள். புரிந்து கொண்டு பேச வேண்டும். நாட்டின் உண்மையைக் கண்டு பேசினால் சரி. எதிர்க்கட்சிகளே எங்களை அழைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறினர்.


நம் அனைவருக்கும் பிரச்சினை இருக்கிறது. பெட்ரோல், டீசல், எரிவாயு இல்லாமல் வரிசையில் நின்றனர். அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் போனது. மக்கள் அந்தளவுக்கு பரிதாபமான நிலைக்குப் போய் இருந்தார்கள். நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் குறைந்தன. அது எங்களுடைய அரசாங்கத்தின் கீழ் நடந்தது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.


72 ஆண்டு கால வரலாற்றில் ஏற்பட்ட போர்களால் எதிர்கொள்ளும் சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தின் போது பெற்ற கடன்களை எமது அரசாங்கம் வந்த பின்னரே செலுத்த வேண்டியிருந்தது. நாங்கள் கடன் வாங்கவில்லை. தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் நாட்டில் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி மக்களுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளது. மக்களுக்கு எரிபொருள் மற்றும் எரிவாயு கிடைத்தால், அத்தியாவசிய மருந்துகள் கிடைத்தால், மக்களுக்குத் தேவையானது அந்தப் பொருட்களா அல்லது தேர்தலா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

 
முனீரா அபூபக்கர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.