அடம்பிடிக்கும் மின்சார சபை !முறுகல் நிலை தொடர்கின்றது.
க.பொ.த உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை நடைமுறைப்படுத்தாமல் இருக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன் அறிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை நடைமுறைப்படுத்தாமலிருக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்டாலும் ஆனால் நேற்று மின் துண்டிப்பு இடம்பெற்றது
இதற்க்கு எதிப்பு தெரிவித்து சட்டக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவுக்கு பதிலளிக்கும் முகமாகவே மின்சார சபை இக்கூற்றை தெரிவித்துள்ளது