⏩ கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒசுசல (பார்மஸி)களையும் ஒழுங்குபடுத்த அவசரத் திட்டம் ஒன்றைத் தயாரிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன உத்தரவு...  

⏩ பாடசாலைக்குச்  செல்லாத குழந்தைகளை மீண்டும் பாடசாலைக்கு அனுப்பும் திட்டமும் உருவாக உள்ளது... 

⏩ புதிய சமுர்த்தி பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசியல் அழுத்தங்களுக்குப் பணியவேண்டாம்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் ஒழுங்குபடுத்த அவசரத் திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  நேற்று (16) மினுவாங்கொடை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

போதைக்கு அடிமையானவர்கள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சில மருந்தகங்களில் இருந்து பல வகையான மருந்துகளை வாங்குவதாக வைத்திய அதிகாரியும் பொலிஸாரும் தெரிவித்தமைக்கு  பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில்  போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களை மீட்பதற்கான திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மினுவாங்கொடை பிரதேச செயலகத்தில் நேற்று (16) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது:

போதைப்பொருளில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்ற கம்பஹா மாவட்டத்தில் விசேட திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுகிறது. பொலீஸ், மருத்துவ அலுவலகங்கள், பாடசாலை பிரதேச செயலகம், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு குழுவை நிறுவி பாடசாலைகளுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.  பாடசாலைகள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள்.  பின்னர் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட  குழந்தைகளையும் பெற்றோரையும் அடையாளம் காண்பது சுலபம். அதுபோல சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு அனைத்து மாவட்டத்திலுள்ள அனைத்து மருந்தகங்களையும் ஒழுங்குபடுத்தும் திட்டத்தை செயல்படுத்தவும்.

பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். ஒரு கிராமத்தில் எட்டு அரச அதிகாரிகள் உள்ளனர். அந்தக் கிராமங்களில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை தேடிக் கண்டுபிடிங்கள்.  அது போல பதிவு செய்தும் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் குறித்து பள்ளிகளில் இருந்து அறிக்கை எடுத்துக்கொள்ளுங்கள்.  குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது வறுமையின் கரணமா அல்லது அல்லது பெற்றோரின் கவனக்குறைவாலா என்றும் அப்படி இல்லாவிட்டால் பெற்றோர் போதைப்பொருளுக்கு அடிமையானவரா என்பதைக் கண்டறியுங்கள்.

வறுமை காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என்றால், அதற்கு எங்களால் தலையிட முடியும். வசதி வாய்ப்புள்ள குடும்பங்களின் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகவில்லை என்றால் அதற்குரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்க முடியும். குழந்தைகள் எழுதப் படிக்கத் தெரியாததால் அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால், அத்தகைய குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த முடியும். இத்றகு  வலயக் கல்விப் பணிப்பாளருக்கு நிறைய வேலை செய்ய முடியும். அதனால் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அனைவரும் ஒன்று சேர்ந்து முழு விவரங்களுடன் ஒரு அட்டவணையை உருவாக்கி, பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வோம். இல்லையெனில், தனியாக வேலை செய்வது கடினம்.

மேலும், தற்போதுபுதிய சமுர்த்தி பயனாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர். இது கிராமிய பொருளாதாரக் குழுக்கள் மூலம் செய்யப்படுகிறது. அந்த பணி ஒழுங்குபடுத்தலில் அரசியல் அதிகாரிகளின் தலையீடு இல்லை. ஆனால்  மக்களின் கோரிக்கைகள் பொதுமக்கள் முகவர்களான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அனுப்பப்படுகிறது.

முன்னுரிமைப் பதிவேடு மூலம் புதிய பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் கிராமத்தில் இருக்கும்போது, சமுர்த்தி தேவைப்படும் குடும்பங்களை  அடையாளம் காணலாம். புதிதாக பயனாளிகளை அடையாளம் காண்பதில் அரசியல் அதிகாரத்தின் தலையீடு இல்லை. ஆனால் அரசியல்வாதிகளாகிய நாங்கள் மக்கள் பக்கம் அமர்ந்து பணியாற்றுகிறோம். புதிய பயனாளிகள் தேர்வு குறித்து யார் கேள்வி கேட்டாலும் அதிகாரிகளுக்கு பதில் சொல்ல முடியுமாக இருக்க வேண்டும். கிராமக் குழுக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் செல்ல வேண்டும். மக்களுக்கு கொடுக்கப்பட்ட பொருட்களுக்கு பொது முகவர்கள் தலையிடத் தேவையில்லை. மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள்  பொதுமக்களின் பக்கம் இருக்க வேண்டும். அதிகாரிகள் பிழையாக தேர்ந்தெடுத்தால் அதைப் பற்றி பேசுங்கள்.

பாராளுமன்ற உறுப்பினர், கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சஹான் பிரதீப், கம்பஹா மாவட்ட செயலாளர் சமன் தர்ஷன பாடிகோரால, மினுவாங்கொடை பிரதேச சபையின் தலைவர் குமார அரங்கல்ல, மினுவாங்கொடை மேயர் நீல் ஜயசேகர, மினுவாங்கொடை பிரதேச செயலாளர் திரு.U.W.T.U ராஜகருணா உட்பட இந்நிகழ்வில் பெருந் திரளான மக்கள்  பலர் கலந்துகொண்டனர்.


முனீரா அபூபக்கர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.