நான்கு பிள்ளைகளின் தாயொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நிலையில், தீயை அணைக்கச் சென்ற கணவரும் தீக்காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேருவளை சமத் மாவத்தையில் வசிக்கும் 28 மற்றும் 24 வயதுடைய திருமணமான தம்பதியரே இவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக நேற்று மதியம் தகராறு ஏற்பட்டு, மனைவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

அவரது உடலில் தீப்பற்றியதால், தீயை அணைக்க முயன்ற கணவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

இருவரும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் பத்மகுமாரவின் பணிப்புரைக்கமைய, பொலிஸ் பரிசோதகர் கயான் கிரிஷாந்த தலைமையில் குற்றப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.