சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் தனது இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார். 

09/01/2023 என திகதியிடப்பட்டு தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் 'வர்த்தமாணி இல. 2061/42-16 of 09th 03 2018 எனும் நடைமுறைக்கு அமைவாக தற்போது வரை பதவியிலிருக்கும் தனது சம்மாந்துறை பிரதேச உறுப்பினர் பதவியை 10 ஜனவரி 2023 முதல் இராஜினாமா செய்கிறேன்' – என அறிவித்துள்ளார்.

இதன்படி தவிசாளர் நௌஷாட் நாளை முதல் (10) தனது இராஜினாமாவை உறுதிப்படுத்தியுள்ளார். 
குறித்த கடிதங்களின் பிரதிகள் சம்மாந்துறை பிரதேச சபை, மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், செயலாளர் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.