முட்டையை அதிக விலைக்கு விற்கும் மாஃபியாவுக்கு சில அமைச்சர்கள் துணைபோவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது.​

குளிர்சாதன அறைகளில் சேமித்து வைக்கப்படும் முட்டைகளை குறைந்த விலைக்கும், மீண்டும் அதிக விலைக்கும் விற்கும் மோசடி கும்பல் நடப்பதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எச். எம். பீ. ஆர் அழஹகோன் தெரிவித்துள்ளார்.​

அதற்கு சில அரசியல்வாதிகளினதும் ஆதரவு இருப்பதாக அழஹகோன் மேலும் குற்றம் சாட்டினார்.​

“உண்மையில் முட்டை வர்த்தக சங்கங்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அன்று வர்த்தமானியில் 43 ரூபாவுக்கு விற்கலாம் என்று கூறியவர்கள் தற்போது 65, 60 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு பேசுகின்றனர். அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, இதனை நுகர்வோருக்கு நேரடியாக வழங்கும் முறையை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்..அதனடிப்படையில்தான் கொழும்பு நகரில் 400,000 முட்டைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த முறை தோல்வியடைந்ததாக காட்ட முயல்கிறார்கள்.....​

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.