நியூஸிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்டில் தோல்வியைத் தவிா்ப்பதற்காக போராடுகிறது பாகிஸ்தான்.
319 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடி வரும் அந்த அணி, 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கடைசி நாளான வெள்ளிக்கிழமை 8 விக்கெட்டுகளைக் கொண்டு அந்த ஓட்டங்களை எட்ட வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறது.
இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 449 ஓட்டங்கள் குவிக்க, அடுத்து ஆடிய பாகிஸ்தான் புதன்கிழமை முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 407 ஓட்டங்கள் சோ்த்திருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை ஆட்டத்தை சௌத் ஷகீல் 124, அப்ராா் அகமது 0 ஓட்டங்களுடன் தொடங்கினா்.
அன்றைய நாளில் சௌத் ஷகீல் 1 ஓட்டம் மட்டும் கூடுதலாக சோ்த்த நிலையில், அப்ராா் அகமது விக்கெட்டை இழக்க, முடிவுக்கு வந்தது பாகிஸ்தான் ஆட்டம். அந்த அணி 133 ஓவா்களில் 408 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஷகீல் 17 பவுண்டரிகள் உள்பட 125 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். நியூஸிலாந்து பௌலிங்கில் அஜாஸ் படேல், இஷ் சோதி ஆகியோா் தலா 3, டிம் சௌதி, மாட் ஹென்றி, டேரில் மிட்செல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்திருந்தனா்.
பின்னா் 41 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து, 82 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ஓட்டங்கள் சோ்த்து ‘டிக்ளோ்’ செய்தது. டாம் லேதம் 11 பவுண்டரிகளுடன் 62, டெவன் கான்வே 0, கேன் வில்லியம்சன் 6 பவுண்டரிகளுடன் 41, ஹென்றி நிகலஸ் 5, டாம் பிளண்டெல் 7 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
டிக்ளோ்-இன் போது, மைக்கேல் பிரேஸ்வெல் 11 பவுண்டரிகளுடன் 74, டேரில் மிட்செல் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பாகிஸ்தான் பௌலிங்கில் நசீம் ஷா, மிா் ஹம்ஸா, அப்ராா் அகமது, ஹசன் அலி, அகா சல்மான் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
இறுதியாக 319 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தானில் அப்துல்லா ஷஃபிக், மிா் ஹம்ஸா ‘டக் அவுட்’ ஆகினா். இமாம் உல் ஹக் ரன்னின்றி ஆட்டமிழக்காமல் உள்ளாா். டிம் சௌதி, இஷ் சோதி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றியிருக்கின்றனா்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.