தாய்லாந்து சந்தையில் இலங்கையின் இரத்தினக்கற்கள், தேயிலை (கருப்பு) போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கான பெரும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதோடு, இந்தப் பேச்சுவார்த்தைகளின் வெற்றியின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும் புதிய துறைகளில் இருக்கும் வாய்ப்புகளை செயல்படுத்துவதற்கும் வழிகள் திறக்கப்படும்.


ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் இயங்கும் தேசிய வர்த்தகப் பேச்சுவார்த்தைக் குழு, இலங்கை சார்பாக பங்கேற்பதோடு, வெளிவிவகார அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, நிதி அமைச்சின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு விவகாரங்கள் திணைக்களம் மற்றும் வர்த்தகத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.


2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை அமுல்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதோடு, உள்நாட்டு வர்த்தக சபை மற்றும் கைத்தொழில் சங்கங்கள் முன்வைத்துள்ள குறிப்பிட்ட கோரிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும்.


உலகின் வர்த்தகம், மக்கள் தொகை மற்றும் பொருளாதாரத்தில் 30% பங்கு வகிக்கும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுமுயற்சியில் (RCEP) இணையும் அரசாங்கத்தின் இலக்கை நோக்கிய பயணத்தில் இந்த ஒப்பந்தம் ஒரு ஆரம்ப படியாக இருப்பதோடு, இதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், முடிவுப் பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்துவதன் மூலம் இரு நாடுகளின் அபிவிருத்தி முயற்சிகளின் முக்கிய அங்கமான சர்வதேச வர்த்தகத்தில் பெரும் முன்னேற்றத்தை அடையவும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.