கொழும்பில் இரத்தினக்கல் ஆபரணக் கண்காட்சி 


இரத்தினக்கல் ஆபரணக் கண்காட்சி ஒன்று கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த மூன்று நாட்களாக இடம்பெறுகின்றது.

கைத்தொழில்கள் பெருந்தோட்ட அமைச்சா் டாக்டா் ரமேஸ் பத்திரன
பிரதம அதிதியாகக்
கலந்து கொண்டு கடந்த 7 ஆம் திகதி கண்காட்சியைத் திறந்து ஆரம்பம் செய்து வைத்தாா்.

50க்கும் மேற்பட்ட இரத்தினக்கல் விற்பனைக் காட்சிக் கூடங்களைக் கொண்டிருக்கின்ற இந்த இரத்தினக்கல் ஆபரணக் கண்காட்சி, கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி, இன்று (8) ஞாயிற்றுக்கிழமையும்,  நாளை 9 ஆம் திகதி திங்கட்கிழமை வரை 3 நாட்கள் சர்வதேச இரத்தினக்கல் ஆபரணக் கண்காட்சியாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.