42 போலி தங்க பிஸ்கட்களுடன் இருவர் கைது

TestingRikas
By -
0


42 போலி தங்க பிஸ்கட்களுடன் இருவர் கைது

விற்பனைக்காக தயார்படுத்தப்பட்ட 11 கிலோ 100 கிராம் நிறையுடைய 42 போலி தங்க பிஸ்கட்களுடன் சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (17) மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)