இறக்குமதி செய்யப்படும் பழ வகைகளின் விலையில் வீழ்ச்சி

சந்தையில் அதிக விலைக்கு விற்பனையாகும் இறக்குமதி செய்யப்படும் பழ வகைகளின் விலை தற்பொழுது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் அப்பில், தோடம்பழ வகைகள், உள்ளிட்ட அதிகமாக இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் உள்ளூர் உற்பத்தியான வாழைப்பழம், பப்பாளி, மற்றும் அண்ணாசி ஆகிய பழங்களுக்கான விலை குறைவடையவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.