எதிர்வரும் காலங்களில் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதனால் நீர்க் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பல நீர் விநியோக உந்து முறைமைகள் பிரதான மின்வட்டத்திலிருந்து மின்சாரத்தை நம்பியிருப்பதன் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொண்டமான் குறிப்பிட்டார்.
இதன்மூலம், மின்சாரக் கட்டண உயர்வு காரணமாக நீர் விநியோகச் செயற்பாடுகளுக்கான செலவினம் கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
“சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நிதி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து நீர் தொடர்பான திட்டங்களுக்கு சூரிய சக்தியை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
இந்த உடன்படிக்கையை அடுத்து நீர் கட்டணம் குறைக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
மாத்தளையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.